1 13 scaled
சினிமாசெய்திகள்

கல்கி 2898 AD திரை விமர்சனம்

Share

கல்கி 2898 AD திரை விமர்சனம்

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் ஆன நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள கல்கி எப்படியுள்ளது என்பதை பார்ப்போன்.

படத்தின் ஆரம்பத்திலேயே மகாபாரத போர் நடந்து முடிகிறது, இதில் துரோணாச்சார்யா மகன்(அமிதாப் பச்சன்) பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்கிறான்.

இதனால் கோபமான கிருஷ்ணன் உனக்கு மரணமே இல்லை, உடல் முழுவதும் இரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் போது, என்னை நீ காப்பாற்ற வேண்டும், அப்போது தான் உன் சாபம் தீரும் என்கிறார்.

6000 வருடங்கள் ஓடி 800 வருடமாக உயிரோடு இருக்கும் யாஷ்கின்(கமல்) உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை அடிமை படுத்தி ஒரு ஊரை உருவாக்கி வைத்துள்ளார்.

அந்த ஊரில் ஒரு பவுண்டி ஹண்டராக பிரபாஸ் வர, ஒன் மில்லியன் யூனிட் இருந்தால் கமல் இருக்கும் காம்ப்ளஸ்குள் வரலாம் என்று ஒரு விதி, இதற்காக பிரபாஸும் போராட, அதே நேரத்தில் கமல் பல பெண்களின் கருவில் இருந்து ஒரு சீரோம் எடுக்க முயற்சிக்கிறார்.

அப்போது அங்கிருக்கும் தீபிகா படுகோன் வயிற்றில் ஒரு குழந்தை உருவாக, அதில் சீரோம் எடுக்கும் போது அது கிருஷ்ணன் தான் என்பது தெரிய வர, அமிதாப் பல வருட தவிப்பிற்கு பலனாக தீபிகாவை தேடி வர, இதற்கு பிரபாஸ் எந்த விதத்தில் உதவுகிறார், அதோடு கமல் நினைத்ததை அடைந்தாரா என்ற பிரமாண்டமே இந்த கல்கி.

மஹாபாரம் என்ற ஒரு mythology களத்தை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு சீக்குவல் இருந்தாள் எப்படியிருக்கும் என்ற அசுர கண்ணோட்டத்துடன் நாக் அஷ்வின் இன்றைய காலக்கட்ட டெக்னாலஜி பொருத்தி இதை கையாண்டதற்காகவே பெரும் பூங்கொத்து கொடுக்கலாம்.

பிரபாஸ் பாகுபலி-க்கு பிறகு அனைத்து தரப்பினருக்குமான படம் கொடுப்பத்தில் கொஞ்சம் தடுமாற, இந்த கல்கி அதை முறியடித்து பிரபாஸை உச்சத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும்.

ஆனால், இதில் பிரபாஸை விட அசுவத்தாமன் ஆக வந்த அமிதாப் தான் ரியல் ஹீரோ, 6000 வருடம் மேல் உயிரோடு ஒரு உயிரை பாதுக்காக்க அவர் எடுக்கும் தவம், அந்த குழந்தை உருவானது ஒரு ஆளாக அமிதாப் ஆடும் ஆட்டம் ருத்ரதாண்டவம்.

அதோடு அந்த கருவை சுமக்கும் பெண்ணாக தீபிகா படுகோன், அவரை காப்பாற்ற போராடும் அண்ணாபென், ஷோபனா, பசுபதி என அனைவரும் நிறைவான நடிப்பு.

ஆங்கிலப்படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகள், அதிலும் கமல் வாழ்ந்து வரும் காம்ப்ளேக்‌ஷ் உலகம் அத்தனை பிரமாண்டம், அதிலும் லிப்ட் போல் பயன்படுத்தும் பிரமாண்ட உருவம், கிளைமேக்ஸில் புஜு ஒரு கொரில்லா ரோபோட் போல் மாறுவது, மேட் மேக்ஸ் டைப்பில் இரண்டாம் பாதியில் வந்த சேஸிங் என அனைத்து பிரமாண்டமும் அட்டகாசம்.

படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிப்பதை தவிர்க்க முடியவில்லை, பிரபாஸ் கேரக்டர் போக போக வெயிட் ஆக மாறினாலும் ஆரம்பத்தில் அவரை எதோ காமெடியன் போல் காட்டியது ஷப்பா ரகம் தான்.

கமலுக்கும் இரண்டாம் பாதியில் தான் அதிக வேலை போல. இதில் அவர் நடிக்காமல் சிஜி வைத்து டப்பிங் மட்டும் கொடுத்துவிட்டார்களோ என்று இருக்கிறது. ஒளிப்பதிவு டாப் க்ளாஸ், சந்தோஷ் நாரயணன் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும், பின்னணி இசை சூப்பர்.

Share
தொடர்புடையது
nayanthara in
பொழுதுபோக்குசினிமா

டொக்சிக் படத்திற்காக யஷ் மற்றும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்ட பிரம்மாண்ட சம்பளம்!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் KGF பட புகழ் யஷ் நடிப்பில் படு பிரம்மாண்டமாக தயாராகும் படம்...

Image
பொழுதுபோக்குசினிமா

2-வது பாதியில் ரவி மிரட்டியிருக்கிறார்: பராசக்தி படத்தைப் பார்த்துவிட்டு கெனிஷா நெகிழ்ச்சிப் பேட்டி!

சுதா கொங்கரா இயக்கத்தில், பொங்கல் வெளியீடாக இன்று திரைக்கு வந்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில், நடிகர் ஜெயம்...

Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...