tamilni 15 scaled
சினிமாசெய்திகள்

ஜோஷ்வா இமைபோல் காக்க திரை விமர்சனம்

Share

ஜோஷ்வா இமைபோல் காக்க திரை விமர்சனம்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இளம் ஹீரோ வருண் நடிப்பில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் ஜோஷ்வா இமைபோல் காக்க.

ஜோஷ்வா இமைபோல் காக்க திரை விமர்சனம் | Joshua Imai Pol Kaakha Movie Review

ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

Contract கில்லர் ஆக இருக்கும் கதாநாயகன் ஜோஷ்வா மற்றும் கதாநாயகி குந்தவி இருவரும் காதலித்து வர, ஒரு கட்டத்தில் தனது காதலன் ஜோஷ்வா Contract கில்லர் என தெரிந்து கொள்கிறான்.

இதன்பின் ஜோஷ்வாவை விட்டு பிரிந்து செல்லும் குந்தவிக்கு பெரும் ஆபத்து ஒன்று வருகிறது. அந்த ஆபத்தில் இருந்து குந்தவியை காப்பாற்ற முடிவெடுத்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

பணத்திற்காக குந்தவியை கொள்ள பல கூலிப்படைகள் முயற்சி செய்கிறார்கள். இதிலிருந்து குந்தவியை ஜோஷ்வா காப்பாற்றினாரா இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பது படத்தின் மீதி கதை.

கதாநாயகன் வருண் உயிரை கொடுத்து நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் மிரட்டுகிறார். மேலும் கதாநாயகியாக நடித்த நடிகை ராஹி எந்த ஒரு குறையும் இல்லாமல் நடித்துள்ளார்.

அதே போல் டிடி-க்கும் இப்படத்தில் நல்ல ஸ்கோப் இருந்தது. மேலும் கிருஷ்ணா நடிப்பு சிறப்பாக இருந்தாலும், அவருடைய கதாபாத்திரம் சரியாக வடிவமைக்க வில்லை.

ஆக்ஷன் கதைக்களத்தை விறுவிறுப்பான திரைக்கதையில் பக்காவாக வடிவமைத்துள்ளார் கவுதம் மேனன். ஆனால், அது படம் பார்ப்பவர்களுக்கு எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை. இதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் ஆகும்.

ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஆனால், இசை எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லை. பின்னணி இசையும், பாடல்களும் ஒர்க்கவுட் ஆகவில்லை. கவுதம் மேனன் படம் என்றால் கண்டிப்பாக இசையை தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பார்கள். இப்படம் அவர்களுக்கு ஏமாற்றமே.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் சண்டை காட்சிகள். ஒவ்வொரு சண்டை காட்சியையும் நேர்த்தியான முறையில் எடுத்துள்ளனர். சண்டை காட்சிகளுக்காகவே இப்படத்தை பார்க்கலாம் என்ற ஃபீல் கிடைத்தது.

Share
தொடர்புடையது
newproject 2024 04 29t124643 635 1714375023
சினிமா

” விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கபடும்..! ” குட் பேட் அக்லி குறித்து தனுஷ் அப்பா பேச்சு..

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘குட் பேட்...

17484429230
சினிமா

ரஜினிகாந்தின் “கூலி” திரைப்பட பட்ஜெட் இத்தனை கோடியா..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது....

17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...