ஆடை அணியாமல் ஆஸ்கர் மேடைக்கு வந்த நடிகர் ஜான் சீனா.. விழுந்து விழுந்து சிரித்த நடிகர், நடிகைகள்
இன்று 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமான முறையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் Oppenheimer, Poor Things திரைப்படங்கள் அதிக ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்தது.
Robert Downey Jr., Christopher Nolan, Cillian Murphy போன்ற புகழ் பெற்ற நட்சத்திரங்கள் தங்களுடைய முதல் ஆஸ்கர் விருதினை கைப்பற்றினார்கள். இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை வழங்க நடிகர் ஜான் சீனா வந்திருந்தார். அப்போது ஆடை அணியாமல் மேடைக்கு வந்த ஜான் சீனா அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
ஜான் சீனாவின் இந்த செயலை பார்த்தவுடன், அரங்கில் இருந்த நடிகர், நடிகைகள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். நகைச்சுவைக்காக இதை செய்திருந்தாலும், இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.