உலக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான். ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்கிற பேச்சை எடுத்தாலே அதில் நம்பர் 1 இடத்தில் இவர் இருப்பார். சினிமாவிற்கு தனது உயிரையே பணயம் வைத்து நடித்துள்ளார்.
Karate Kid, Rush Hour, Drunken Master, Police Story 1985 என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக ஜாக்கி சான் நடிப்பில் Karate Kid 2 வெளிவரவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் ஜாக்கி சான் தன்னுடைய ரூ.3400 கோடி மதிப்பிலான சொத்தை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் Jackie Chan Charitable Foundation மூலம் நன்கொடையாக கொடுத்துள்ளார் ஜாக்கி சான்.
இதுகுறித்து அவர் கூறியதாவது “நான் சிறுவயதில் ஏழ்மையில் தவித்து இருக்கிறேன், அவர்களுடைய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். உதவி செய்யும் போது அவர்கள் படும் சந்தோஷம், என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது” என கூறியுள்ளார். இந்த தகவல் வெளிவந்த நிலையில், ரசிகர்கள் பலரும் ஜாக்கி சான் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.