Pugazh Photos 7
சினிமாசெய்திகள்

அது என் ஸ்கிரிப்ட் இல்லை.. என்னை மன்னிசுடுங்க! கமல் ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட புகழ்

Share

விஜய் டிவியில் கம்ப்யூட்டர் சர்வீஸ்மேனாக தனது பயணத்தை தொடங்கியவர் புகழ். இவர் அதே விஜய் டிவியிலேயே குக்கு வித் கோமாளி மூலம் புகழ் பெற்றார். அவர் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்கு பெயர் பெற்றவர்.

அவரது முழுப்பெயர் புகழேந்தி. ஆனாலும் பொதுவாக புகழ் என்று செல்லமாக அழைக்கப்படுவார். இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார்.

தமிழ் சினிமாவில் தீனாவுடன் சிரிப்பு டா படத்தில் நடித்தார் . பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கலக்க போவது யாரு படத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குக் வித் கோமாளியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது .

சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஓடி கொண்டிருக்கும் பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7.

பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸ் பற்றி பேசிய புகழ், ரொம்ப பேசப்படும் ஒரு நபராகவும் பிசியான நபராகவும் இருப்பது கமல்ஹாசன் தான். அவரை போல பேசலாம் என்று குரோஸியிடம் சொல்லி இருவரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரான மாயாவையும், உலக நாயகன் கமல்ஹாசனையும் பற்றி நடு மேடையில் வைத்து பயங்கரமாக கலாய்த்து இருந்தனர் . இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக பரவலடைந்தது .

இந்த நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனை பொதுவில் வைத்து கலாய்த்த காரணத்தின் அடிப்படையில், தற்போது மனம் நொந்து போன புகழ் கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் .

அதன்படி அவர் கூறுகையில், “கமல் சார் ரசிகர்களுக்கு வணக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன் டுபாயில் ஒரு ஷோ நடந்தது . அவங்க கொடுத்த ஸ்கிரிப்ட் ல ஒரு சில வார்த்தைகள் கமல் சார்ரின் ரசிகர்களை பாதித்து இருக்கு அதுக்கு உண்மையிலேயே நான் மன்னிப்பு கேக்கிறேன் . என்று கண் கலங்கியவாறு புகழ் தெரிவித்து இருக்கின்றார் .

மேலும், நான் அந்த மாதிரி பண்ணினது இல்லை . உங்களுக்கு வருத்தமா இருந்தால் என்னைய மன்னிச்சிருங்க . இனி மேல் எந்த ஷோலையும் நான் இப்பிடி பண்ண மாட்டேன் என்று ரொம்பவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இருந்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...