tamilni 156 scaled
சினிமாசெய்திகள்

எல்லாத்துக்கும் காரணம் சினிமாக்காரங்க தான்.. போதை மருந்து குறித்த கமல் பதிவுக்கு இயக்குனர் பதிலடி..

Share

எல்லாத்துக்கும் காரணம் சினிமாக்காரங்க தான்.. போதை மருந்து குறித்த கமல் பதிவுக்கு இயக்குனர் பதிலடி..

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் இந்த குற்றங்கள் நடப்பதற்கு காரணம் போதைப்பொருள் நடமாட்டம் தான் என்றும் எனவே போதைப் பொருளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறியிருந்ததாவது: எங்கே போகிறோம்?

புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றி பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசி கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா?

குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்கு பின்னால் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போக செய்யும் போதை வஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தை சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு இயக்குனர் லெனின் பாரதி என்பவர் பதிலடி கொடுத்துள்ளார். போதைப் பொருள் நடமாட்டம் இளைஞர் மத்தியில் பரவியதற்கு முக்கிய காரணம் சினிமாக்காரர்கள் தான் என்றும், சினிமாக்காரர்கள் பொறுப்புடன் படம் எடுக்கும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது

‘எங்கே போகிறோம்’ என்று ஆராய்வதை போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை,போதை, வெற்றுப் பெருமை, வக்கிரம், குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து.. “எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது..

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...