சினிமாசெய்திகள்

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா வெங்கடேஷ் பட்: வைரலாகும் அவரின் பதிவு

Venkatesh Bhat1
Share

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா வெங்கடேஷ் பட்: வைரலாகும் அவரின் பதிவு

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களை தாண்டி ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. ஒரு ஷோ முடிகிறதா உடனே அடுத்த புதிய ஷோ தயாராகிவிடும்.

அப்படி அடுத்தடுத்து வந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி இந்த நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக தொடங்கியது.

5வது சீசனில் எல்லாமே புதியது, இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர், கோமாளிகள் என நிறைய புதியது.

இந்த 5வது சீசன் தகவல் வந்ததும் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

அவர் வெளியேறியது குறித்து நிறைய பேர் பேசிவிட்டனர், ஆனால் அவர் சன் தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில், குக் வித் கோமாளிக்கு வராமல் இங்க என்ன என்ஜாய் வேண்டி இருக்கு பட்டுக்குட்டி உங்களுக்கு? உங்க ஃபேன்ஸ் எல்லாம் உங்களை மிஸ் பண்ணிட்டு இருக்கோம். நீங்க என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்களா? என பதிவிட்டுள்ளார்.

அதற்கு வெங்கடேஷ் பட், இரண்டு வாரத்தில் உங்களை எல்லாம் பார்க்க வருகிறேன் என பதிவிட்டுள்ளார். இதற்கு அர்த்தம் அவர் விரைவில் சன் டிவியின் புதிய ஷோவில் வருவதை தான் தெரிவித்திருக்கிறார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...