tamilni 336 scaled
சினிமாசெய்திகள்

நடிகை விசித்ராவை ஹோட்டல் ரூமுக்கு வர சொன்ன நடிகர் இவர் தானா.. வீடியோ இதோ

Share

நடிகை விசித்ராவை ஹோட்டல் ரூமுக்கு வர சொன்ன நடிகர் இவர் தானா.. வீடியோ இதோ

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசினார்கள். இதில் நடிகை விசித்ரா தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மனம் உறுகி பேசினார்.

இதில் ’படப்பிடிப்பின் போது, அப்படத்தின் ஹீரோ என்னை அவருடைய ரூமுக்கு வரச்சொல்லி தவறான முறையில் அழைத்தார். நான் போகவில்லை. அதன்பின் என்னை பலரும் டார்கெட் செய்து தவறான முறையில் நடக்க முயன்றனர்’.

‘படப்பிடிப்பில் என்னை ஒருவர் தவறான முறையில் தடவினார். தெரியாமல் செய்திருப்பார் என முதல் முறை விட்டுவிட்டேன். அதன்பின் மீண்டும் மீண்டும் அதே போல் நடந்தது. நான் என்னை தொட வந்த கையை இறுதியில் பிடித்துவிட்டேன்’.

’உடனடியாக அவரை அழைத்து கொண்டு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் சென்று, எனக்கு நடந்த கொடுமையை கூறினேன். ஆனால், அவர் என் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதைப்பற்றி புகார் கொடுத்ததும் யாரும் எனக்கு உதவவில்லை. சங்க தலைவரும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என கண்கலங்கி’ பேசினார் விசித்ரா.

இந்நிலையில், நடிகை விசித்ராவை ரூமுக்கு வா என அழைத்து, இப்படியொரு கொடுமை நடக்க காரணமாக இருந்த அந்த நடிகர் பாலகிருஷ்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

கதையில் விசித்ரா கூறிய விஷயங்களும், பாலகிருஷ்ணாவின் இப்படத்தின் காட்சிகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

நடிகை விசித்ரா இந்த சம்பவத்தை கூறும்போது தன்னை தவறாக அழைத்து டாப் நடிகர் என்று விசித்ரா குறிப்பிட்டு இருந்தார். இதனால் அனைத்து விஷயங்களும் பாலகிருஷ்ணாவுடன் ஒத்துப்போவதாக கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...