மைனா நந்தினி இரண்டாவது தடவையாக பிரக்னண்டா? குழப்பத்தில் மைனா புருஷன்!

3 17

மைனா நந்தினி இரண்டாவது தடவையாக பிரக்னண்டா? குழப்பத்தில் மைனா புருஷன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி‘ என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவரே நடிகை நந்தினி.

சின்னத்திரையில் அன்று முதல் இன்று வரை இவர் ரசிகர்களால் மைனா நந்தினி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இணைந்து நடித்திருந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்துப் புகழ் பெற்றிருந்தார்.

அதுமட்டுமல்லாது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்திலும் நடித்திருக்கின்றார். அத்தோடு ‘விக்ரம்’ படத்திலும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருக்கின்றார்.

இதை தொடர்ந்து நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குநராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

கடைசியாக Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் இணைந்து கலக்கினார். புதிதாக யூடுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், மைனா நந்தினி தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆனாலும், தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூற, அவர்கள் முழுமையாக நம்ப இல்லை. அவரது கணவரும் குழப்பத்தில் தவிக்க, இறுதியாக தான் பிராங் பண்ணியதாக கூறியுள்ளார் மைனா நந்தினி.

Exit mobile version