நடிகர் ஜெய் சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமனன், கோவா என ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவில் இன்னும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அவர் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
40 வயதாகும் ஜெய் பிரபல ஹீரோயின் ஒருவருடன் காதலில் இருந்த நிலையில் அது பிரேக்அப் ஆகிவிட்டது.
இந்நிலையில் தற்போது நடிகை பிராக்யா நக்ரா உடன் திருமணம் முடிந்துவிட்டதாக “New Life Started” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கின்றனர்.
ஆனால் அந்த போட்டோவின் பின்னால் கேமரா இருப்பதை பார்க்கும்போது இது படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர்கள் வெளியிட்ட பதிவு என்பது தெளிவாக தெரிகிறது.
இதெல்லாம் பழைய கான்செப்ட் என நெட்டிசன்கள் ஜெய்யை கலாய்த்து வருகின்றனர்.