ரஜினியின் புகழை பார்த்து கோபப்பட்ட இளையராஜா.. இப்படியெல்லாம் நடந்ததா

24 664196deaa12f

ரஜினியின் புகழை பார்த்து கோபப்பட்ட இளையராஜா.. இப்படியெல்லாம் நடந்ததா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்திற்கு கூலி என தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த டைட்டில் டீசரில் தனது அனுமதியின்று தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக கூறி, காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா.

ரஜினியின் நெருக்கமான நபர்களில் ஒருவரான இளையராஜாவே இப்படி செய்திருக்கிறாரே என பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், ரஜினிக்கும் – இளையராஜாவிற்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேசியுள்ளார்.

இதில் ஒரு முறை இளையராஜாவும் ரஜினியும் இணைந்து திருவனாமலைக்கு சென்றார்களாம். அங்கு சென்று காரில் இருந்து இறங்கியவுடன் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக திரண்டு ‘தலைவா’ என கத்திக்கொண்டு ரஜினியிடம் சென்றுவிட்டார்களாம்.

கோபமடைந்துவிட்டாராம். இதன்பின் நீ கார்ல ஏறி கிளம்பு என ரஜினியிடம் கூறினாராம் இளையராஜா. அதன்படி ரஜினியும் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version