இளையராஜா பயோபிக்! படப்பிடிப்பு என்னாச்சி? தனுஷ் எடுத்த முடிவு!

17285547330

இளையராஜா பயோபிக்! படப்பிடிப்பு என்னாச்சி? தனுஷ் எடுத்த முடிவு!

தனுஷ் இயக்கும் நான்காவது திரைப்படம் தான் இட்லி கடை. தனுஷுடன் இணைந்து இப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் என பலர் நடித்து வருகின்றனர். பீல் குட் படமாக உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அநேகமாக டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும்.

இந்நிலையில் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. தனுஷ் நடிக்கும் இளையஜாராவின் பயோபிக் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் தற்போது இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு துவங்க மேலும் சில மாதம் எடுக்குமாம். தற்போது தனுஷ் நடித்து இயக்கி வரும் படங்களின் வேலைகளை முடித்துக்கொண்டு தான் இளையராஜா பயோ பிக்கில் நடிக்கவுள்ளாராம் தனுஷ்.

 

Exit mobile version