சினிமாசெய்திகள்

‘கங்குவா’ படத்தில் 5 வேடங்களில் நடிக்கும் சூர்யாவின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியானது முழுவிபரம்

Share
tamilni Recovered 23 scaled
Share

‘கங்குவா’ படத்தில் 5 வேடங்களில் நடிக்கும் சூர்யாவின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியானது முழுவிபரம்

நடிகர் சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தான் ‘கங்குவா’. இப்படமானது பெரும் பொருட் செலவில் பான் இந்தியப் படமாக தயாராகி வருகிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், இன்னொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் குறிப்பாக 13 கதாபாத்திரங்களில் கங்குவா அரசனாக சூர்யா நடிப்பதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா முதல் இப்படத்தில் நடித்துள்ள முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘கங்குவா’ படத்தில் 5 வேடங்களில் நடித்து ரசிகர்களை மிரள வைக்க தயாரான சூர்யா, 30 முதல் 40 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஹீரோயினான திஷா பதானி நடிக்க 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு நிகரான வேடத்தில் நடித்துள்ள பாபி தியோல்  3 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து, நடிகர் ரவி ராகவேந்திரா 15 லட்சம் ரூபாய், நடிகர் யோகி பாபுவுக்கு 60 லட்சம் ரூபா,  ரெடின் கிங்ஸ்லிக்கு 30 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

நடிகை கோவை சரளா 25 லட்சம் ரூபாய், நடிகர் ஆனந்தராஜ் 20 லட்சம் ரூபாய், நடிகர் ஜெகபதி பாபுவுக்கு 80 லட்சம் ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...