OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் பிளாக் பஸ்டர் படமான லவ்வர்- எப்போது பாருங்க
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘லவ்வர்‘ படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், அழுத்தமான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான ‘லவ்வர்’ படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
நடிகர்கள் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தற்கால தலைமுறையின் காதல் பிரச்சனைகளை வித்தியாசமான பார்வையில் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
மிக முக்கியமாக, இதற்கு முன் மிகச் சில தமிழ்ப் படங்கள் மட்டுமே பேசிய, உறவுகளின் பின்னால் உள்ள சிக்கல்களை லவ்வர் திரைப்படம் பேசுகிறது. காதலில் ஒருவருக்கு இன்னொருவர் மேல் ஏற்படும் சந்தேகம், மற்றவருக்கு எப்படி மன உளைச்சலாக மாறும், மற்றும் அது உறவை எப்படி சுமையாக மாற்றும் என்பதை இப்படம் காட்டுகிறது.
காதலில் ஆதிக்கம் எப்படி உறவை நச்சுத்தன்மையுடையதாக மாற்றும் என்பதை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இப்படத்தில் மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோருடன், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிண்டு பாண்டு மற்றும் அருணாசலேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லவ்வர் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ச் 17 முதல் லவ்வர் படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும்.
இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது
- 70 mm cinema
- breaking news
- cinema
- cinema gossip 70mm
- Cinema News
- cinema news tamil
- cinema one
- cinema one originals
- cinema seithigal
- kapamilya news
- kollywood news
- latest news
- latest tamil cinema news
- latest tamil news
- News
- news in tamil
- news tamil
- news18 tamil nadu news
- pinoy showbiz news
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil live news
- tamil nadu news
- Tamil news
- today tamil news
- trending news
- viral news
Comments are closed.