அப்பாவின் பெயரில் வளரக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார்: இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறித்து சித்தப்பா விக்ராந்த் நெகிழ்ச்சி!

images 7 1

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது சித்தப்பாவும் நடிகருமான விக்ராந்த், ஜேசன் சஞ்சய் குறித்துப் பேசியுள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வந்தபோது தனது மகன் விஜய்யை நாயகனாகக் களமிறக்கினார். அதேபோல், விஜய் தற்போது நடிப்பிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கும் நேரத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் சுதீப் நடிக்கும் ‘Sigma’ என்ற படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி வருகிறார்.

ஜேசன் சஞ்சய் குறித்துப் பேசிய நடிகர் விக்ராந்த், அவர் இயக்குநர் ஆவதில் இருந்த உறுதியைப் பாராட்டியுள்ளார்.

“ஜேசனிடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவருக்கு இயக்கம் பிடிக்கும் என்பதுதான். அவ்வளவு இடத்திலிருந்து அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தன, அது எனக்கே தெரியும். எதிர்காலத்தில் அவர் நடிக்கக்கூட செய்யலாம்.

ஆனால், இயக்குநர் தான் ஆவேன் என்று உறுதியாக நின்றார். அவருடைய அப்பா மிகப்பெரிய ஸ்டார். ஆனால், அப்பாவின் பெயரில் வளரக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் இருப்பது பெரிய விஷயம். அவர் மிகவும் நல்லவர். அமைதியாக இருப்பார்,” என்று தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் நடிப்பு வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டு, தனது சொந்த விருப்பமான இயக்கத்தைத் தேர்வு செய்ததுடன், தன் தந்தையின் (விஜய்) புகழைச் சார்ந்திருக்காமல் இருப்பது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Exit mobile version