images
சினிமாசெய்திகள்

கவுண்டமணி நிஜமான பெயர் என்ன தெரியுமா.. மாற்றியதே இந்த நடிகர் தானா

Share

கவுண்டமணி நிஜமான பெயர் என்ன தெரியுமா.. மாற்றியதே இந்த நடிகர் தானா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவின் உச்ச காமெடியனாக ஒரு காலத்தில் வலம் வந்தவர். நடிகர் செந்தில் உடன் சேர்ந்து அவர் செய்த காமெடி காட்சிகள் தற்போதும் பெரிய அளவில் பிரபலம்.

அவரது நக்கல் மற்றும் நையாண்டியான பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. சமீப காலமாக கவுண்டமணி ஹீரோவாக நடித்து வருகிறார். 49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்று படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் யோகி பாபுவும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

நடிகர் கவுண்டமணி நக்கல் மன்னன் என பெயர் எடுக்கும் அளவுக்கு counter வசனங்கள் பேசுவதில் வல்லவர். அவரது நிஜமான பெயரே கவுண்டமணி என்று தான் எல்லோரும் நினைத்திருப்பீர்கள். ஆனால் அவரது உண்மையான பெயர் சுப்பிரமணி.

பாக்யராஜின் ஒரு படத்தில் அவர் நடித்திருந்தார். அதன் டைட்டில் கார்டில் அவரது பெயர் கவுண்டமணி என பாக்யராஜ் எழுதி கொடுத்திருக்கிறார். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் அவர் பெயர் கவுண்டமணி அல்ல counter மணி என ஒருவர் பாக்யராஜிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிக்கும் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏதாவது கவுண்டர் வசனங்கள் கொடுத்து எல்லாரையும் சிரிக்க வைத்து விடுவார் அதனால் எல்லோரும் கவுண்டர் மணி என அழைத்தார்களாம். “அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. கவுண்டமணி என டைட்டில் கார்டில் ஏற்கனவே வந்துவிட்டதால் அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன் என பாக்கியராஜ் சமீபத்திய பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.

அதனால் கவுண்டமணி என பெயர் வர பாக்யராஜ் தான் காரணம் என தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...