GOAT படம் இதுவரை இத்தனை கோடிகளை வசூல் செய்துவிட்டதா! மாஸ் காட்டும் விஜய்

24 66c7ff0e5961c

GOAT படம் இதுவரை இத்தனை கோடிகளை வசூல் செய்துவிட்டதா! மாஸ் காட்டும் விஜய்

தளபதி விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் தயாராகியுள்ள இப்படத்திம் ட்ரைலர் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும் 50 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி, ஜெயராம், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். மேலும் 80ஸ் காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் மோகன் GOAT படத்தில் வில்லனாக நடித்துள்ளார். GOAT படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் துவங்கியுள்ளது.

இதுவரை ரூ. 2.5 கோடி வரை ப்ரீ புக்கிங்கில் GOAT படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் 12 நாட்கள் இருக்கும் இனி வரும் நாட்களில் ப்ரீ புக்கிங்கில் GOAT எந்த அளவிற்கு வசூல் செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version