8 1 scaled
சினிமாசெய்திகள்

ராமர் கோவிலுக்கும் போறாரு.. வீரமணி பக்கத்திலயும் உட்கார்ந்திருக்காரு.. ரஜினி குறித்து விமர்சனம்..!

Share

ராமர் கோவிலுக்கும் போறாரு.. வீரமணி பக்கத்திலயும் உட்கார்ந்திருக்காரு.. ரஜினி குறித்து விமர்சனம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ராமர் கோவிலுக்கு சென்ற போது அவரை பாஜகவின் ஆதரவாளர் என்று விமர்சனம் செய்தனர். அதன் பிறகு அவர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த போதும் அவர் பாஜகவின் அடிமை என்றும் சங்கி என்றும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் திடீரென சசிகலாவின் வீட்டிற்கு அவர் சென்றபோது அவர் அதிமுக ஆதரவாளர் என்று கூறிய நிலையில் நேற்று அவர் கலைஞர் கருணாநிதி நினைவிட திறப்பு விழாவுக்கு சென்று முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் கி வீரமணி ஆகியோர்கள் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவரை விமர்சனம் செய்தவர்கள் வாயை மூடி உள்ளனர்.

பாஜக தலைவர்களை சந்தித்த போது மட்டும் சங்கி என்று ரஜினிகாந்த்தை விமர்சனம் செய்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் கி வீரமணியை சந்தித்த போது அமைதியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியை பொறுத்தவரை அவருக்கு அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உண்டு என்றும் அவரை எந்த அரசியல்வாதியும் பகைத்துக் கொள்வதில்லை என்றும் ரஜினியை விரும்பியே பல அரசியல்வாதிகள் அழைத்து பேசி வருகின்றனர் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், ஏன் சாமியே இல்லை என்று கூறும் கி வீரமணி உடன் கூட ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் நட்பாக இருக்கிறார் என்றும் அவருடைய பார்வை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது, ஆனால் அவரை பற்றிய விமர்சனங்கள் தான் மாறி மாறி வருகிறது என்றும் ரஜினி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்லும் ரஜினிகாந்த் இன்னொரு பக்கம் ராமர் என்ன இன்ஜினியரா என கேலி செய்த கருணாநிதி நினைவிடத்திற்கும் சென்று உள்ளார் என்பதால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என்றும் ரஜினி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...