உலகளவில் பிரபலமான நடிகை மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை அனோக் ஐமி மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
1947 முதல் 2019ம் ஆண்டு வரை சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் அனோக் ஐமி. பிரெஞ்சு ரொமன்டிக் படமான, ஏ மேன் அண்ட் எ வுமன் மூலம் 1966ஆம் ஆண்டு உலகளவில் பிரபலமானார்.
லோலா, ஆண்ட்ரே மேன், ஜஸ்டின், ஏ லீப் இன் த டார்க் என பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோல்டன் குளோப் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், நடிகை அனோக் ஐமி காலமாகிவிட்டதாக அவர் மகள் மானுயெல்லா தெரிவித்துள்ளார்.
இவருடைய மரணம் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் மறைவுக்கு திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.