தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் டாப் ஸ்டார் பிரஷாந்த்.. காரணம் என்ன தெரியுமா

24 661cca9cc671d

தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் டாப் ஸ்டார் பிரஷாந்த்.. காரணம் என்ன தெரியுமா

ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திரங்களில் ஒருவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். இவர் 1990ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ஆணழகன், ஜோடி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். மேலும் தற்போது இவர் நடிப்பில் அந்தகன் மற்றும் Goat ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதில் தளபதி விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த் நடித்து வரும் Goat திரைப்படத்திலிருந்து முதல் பாடல் விசில் போடு, நேற்று வெளிவந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால், அனைத்தையுமே விட நடிகர் பிரஷாந்தை தான் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அவருடைய நடனம் வேற லெவல் மாஸாக இருக்கிறது என கூறி, அவர் நடனமாடிய வீடியோ மட்டுமே இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Exit mobile version