சினிமாசெய்திகள்

மாடியில் இருந்து குதித்து சாக சொன்னால் கூட அதையும் செய்வேன்: கேபிஒய் பாலா அதிர்ச்சி பேட்டி..!

kpy bala 66273e852c630
Share

மாடியில் இருந்து குதித்து சாக சொன்னால் கூட அதையும் செய்வேன்: கேபிஒய் பாலா அதிர்ச்சி பேட்டி..!

என் அண்ணன் ராகவா லாரன்ஸ் சொன்னால் மாடியிலிருந்து குதித்து சாகக்கூட தயார் என்று கேபிஒய் பாலா சமீபத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா பல சமூக சேவை செய்து வருகிறார் என்பதும் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு அவர் உதவி செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய பாலா, ‘மக்களால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன், எனவே என்னுடைய வருமானம் எல்லாம் மக்களுக்கு தான் , மக்களுக்கு என்னால் முடிந்தவரை உதவி செய்வேன் என்று கூறினார்.

மேலும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பது குறித்து கூறிய போது ’ராகவா லாரன்ஸ் அண்ணன் அவர்களின் உதவியால்தான் நான் ஹீரோவாக நடிக்கிறேன், அவர் என்ன சொன்னாலும் நான் செய்வேன், அவர் சொன்னதை முதலில் செய்துவிட்டு அதன் பிறகு தான் ஏன் என்று கேள்வி கேட்பேன்.

குறிப்பாக கீழே குதி என்று ராகவா லாரன்ஸ் அண்ணன் கூறினால், ஏன், எதற்காக என்று கேட்காமல் குதித்து விட்டு அதன் பிறகு ஏன் என்று கேட்பேன். அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு மதிப்பு மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் கீழே குதித்து சாக சொன்னால்கூட சாக தயார் என்ற அர்த்தத்தில் பாலா பேசிய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...