tamilni 20 scaled
சினிமாசெய்திகள்

சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்.. சார்பட்டா நடிகைக்கு கிடைத்த பிரம்மாண்ட படம்

Share

சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்.. சார்பட்டா நடிகைக்கு கிடைத்த பிரம்மாண்ட படம்

‘சார்பட்டா பரம்பரை‘ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.‌

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...