சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியதற்குக் காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், நேற்று இந்தப் படத்திலிருந்து தான் விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
தற்போது கிடைத்த தகவல்களின்படி, இயக்குநர் சுந்தர் சி, ரஜினியிடம் ஒரு ‘ஜாலியான’ கதையின் ஒன்லைனைக் கூறியுள்ளாராம். ஆரம்பத்தில் அது ரஜினிக்கு பிடித்திருந்தாலும், அவர் பின்னர் ‘மாஸ் எலிமெண்ட்ஸ்’ அதிகம் இருக்கும் கதையை விரும்பியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின் மூலம், விசேட தேவையுடைய மாணவர்கள் விரும்பும் துறைக்குச் சென்று கல்வி கற்பதற்கான சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரஜினி ஸ்கிரிப்ட்டில் மாற்றங்களைக் கூறியபோது, மாஸ் எலிமெண்ட்ஸுடன் கூடிய கதையை இயக்க தான் சரியான ஆள் இல்லை என உணர்ந்த சுந்தர் சி, படத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், சுந்தர் சியை மீண்டும் அழைத்து வந்து இந்தப் படத்தை இயக்க வைக்க, தயாரிப்புத் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். ‘தலைவர் 173’ படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

