1 1 28
சினிமாசெய்திகள்

இந்தியன் 3 OTTல் ரிலீஸா? அல்லது திரையரங்கில் ரிலீஸா? இயக்குனர் ஷங்கர் அதிரடி பதில்

Share

இந்தியன் 3 OTTல் ரிலீஸா? அல்லது திரையரங்கில் ரிலீஸா? இயக்குனர் ஷங்கர் அதிரடி பதில்

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. 1996ல் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.

கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவான இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கடந்த ஜூலை மாதம் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. மேலும் பலராலும் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் இந்தியன் 3 நேரடியாக OTTல் வெளியாகிறது என பேச துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் “இந்தியன் 2 படத்திற்கு நெகட்டிவான விமர்சனம் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது பரவாயில்லை. கேம் ஜேஞ்சர் படத்துடன் சேர்த்து, இந்தியன் 3 படத்தை சிறப்பாக உங்களுக்கு கொடுப்பேன்.” என ஷங்கர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியன் 3 திரைப்படம் திரையரங்கில் தான் வெளிவரும் என்றும் ஷங்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் OTT ரிலீஸ் குறித்து வெளிவந்த வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...