நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை இயக்கியவர் பாண்டிராஜ். வசூலைக் குவித்த இந்தப் படத்தை அடுத்து, அவர் யாருடன் கூட்டணி சேரப் போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் அடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணைத் தான் இயக்கப் போகிறாராம். மேலும், இது இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதையாக இருக்கும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

