25 6843e372504a2
சினிமா

இதுவரை நடிக்காத ரோலில் நடிகர் தனுஷ்.. வெளியான ஷூட்டிங் போட்டோ

Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. மேலும் இட்லி கடை எனும் படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார்.

இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜுன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, தனுஷ் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் இருந்து தனுஷ் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தனுஷ் விமானப்படை அதிகாரி உடையில் இருக்கின்றார்.

இதன் மூலம் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது. தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
25 684526f15dfb3
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் இணையும் 25 வயது சென்சேஷனல் நடிகை.. அட இவரா!

மாதரசி மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் முருகதாஸ் இயக்கியுள்ள...

25 68451687c1682
சினிமாசெய்திகள்

முன்னாள் கணவர் நினைவாக இருந்த விஷயத்தை உடலில் இருந்து நீக்கிய சமந்தா! புகைப்படம் இதோ

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா கடந்த 2017ம் ஆண்டு நடிகர்...

25 68452e0cc970f
சினிமாசெய்திகள்

நடிகருடன் 2 ஆண்டுகள் டேட்டிங் செய்த தீபிகா படுகோன்.. பிரேக் அப் செய்த நடிகர்!

மாடலிங் துறையில் இருந்து இப்போது நடிகராக வளர்ந்துள்ளார் முசமில் இப்ராஹிம். இவர் நடிகை தீபிகா படுகோனை...

25 6845624b38b32
சினிமாசெய்திகள்

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க

விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் வடிவேலு பாலாஜி. நடிகர் வடிவேலு போலவே...