25 6843e372504a2
சினிமா

இதுவரை நடிக்காத ரோலில் நடிகர் தனுஷ்.. வெளியான ஷூட்டிங் போட்டோ

Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. மேலும் இட்லி கடை எனும் படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார்.

இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜுன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, தனுஷ் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் இருந்து தனுஷ் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தனுஷ் விமானப்படை அதிகாரி உடையில் இருக்கின்றார்.

இதன் மூலம் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது. தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...

Untitled 25
பொழுதுபோக்குசினிமா

பாலிவுட்டில் அடுத்த அதிரடி: சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா! ‘வாரிசு’ இயக்குனர் இயக்கும் புதிய படம்

தென்னிந்திய திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்குப்...