சினிமாசெய்திகள்

தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. லேட்டஸ்ட், ஆளே மாறிட்டாரே

Share
24 6729f86c5193c 3
Share

தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. லேட்டஸ்ட், ஆளே மாறிட்டாரே

நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சனத்தை ஆரம்பத்தில் பெற்று இப்போது இவரை தவிர வேறு சிறந்த நடிகர் இல்லை என்று கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என இவரது வளர்ச்சி பெரிய அளவில் உள்ளது. கடைசியாக தனுஷே இயக்கி, நடித்து ராயன் திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று புதுக்கோட்டையில் இருந்து சரவணன். கடந்த 2004ம் ஆண்டு ஸ்டான்லி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாயகியாக அபர்ணா என்பவர் நடித்திருந்தார், இதுதான் இவருக்கு முதல் தமிழ் படம்.

இப்படத்தை தொடர்ந்து ABCD, கண்ணுக்குள்ளே போன்ற படங்களில் நடித்தவர் சில மலையாள படங்களிலும் நடித்தார்.

பின் சரியாக பட வாய்ப்புகள் அமையாததால் 2011ம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

தற்போது நடிகை அபர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் தனுஷ் பட நடிகையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...