கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் (Mrunal Thakur) இடையேயான கிசுகிசுக்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளன.
தனுஷ் தமிழ், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வரும் 28ஆம் திகதி வெளியாகிறது.
தனுஷ் படங்களில் பிஸியாக இருந்தாலும், அவரைச் சுற்றி வதந்திகளும் அடிக்கடி பரவுகின்றன. அண்மையில், தனுஷும் மிருணாள் தாக்குரும் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. ஆனால், இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறி மிருணாள் தாக்குர் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
சிறிது நாள்கள் தணிந்திருந்த அந்த வதந்தி தற்போது மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. மிருணாள் தாக்குர் தனது அடுத்த படமான ‘தோ தீவானே ஷாஹர் மெய்ன்’ (Do Deewane Shahar Mein) படத்தின் அனிமேஷன் டீசரை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
இந்த டீசர் வீடியோவிற்கு, நடிகர் தனுஷ் “தோற்றமும் ஒலியும் நன்றாக இருக்கிறது” என்று கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு மிருணாள் தாக்குர் பதிலுக்கு இதய ஈமோஜியை பதிவிட்டார். தனுஷின் இந்த கமெண்ட் மற்றும் மிருணாள்தாக்கூரின் பதில் ஆகியவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை வைத்து இருவரும் இன்னும் டேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, மிருணாள் தாக்குர் நடித்த ‘சன் ஆஃப் சர்தார் 2’ திரைப்பட நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டதும், அப்போது இருவரும் நெருக்கமாகப் பேசிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.