பாலிவுட் திரையுலகம் மூலம் பிரபலமாகி இன்று உலகளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தீபிகா படுகோன், திரைப்படத் துறையில் பணிபுரிபவர்களின் ஆரோக்கியம் மற்றும் வேலை நேரம் குறித்து முக்கியமான கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
நடிகை தீபிகா படுகோன், “திரைப்படத் துறையிலும் 8 மணி நேர வேலையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வாழ்க்கையில் அனைவரும் தூக்கம், உடற்பயிற்சி,சத்தான உணவு ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவர் முதன்முதலில் அறிமுகமானது கன்னடத்தில் வெளிவந்த ‘ஐஸ்வர்யா’ என்ற படத்தின் மூலம்தான். இதன் பின், ஷாருக்கான் நடித்த ‘ஓம் ஷாந்தி ஓம்’ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கிய தீபிகா படுகோன் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
நடிகர் ரன்வீர் சிங் உடன் 2018ஆம் ஆண்டில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

