கோமாளி இயக்குநரின் புதிய அவதாரம்

komali

நடிகர் ஜெயம் ரவி தயாரித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கோமாளி படத்தை இயக்கிய இயக்குநர் கதாநாயகனாக களமிறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கோமாளி’.

இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்தப் படத்தில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், படத்தை இயக்கிக் கொண்டு, தானே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22ஆவது திரைப்படமாக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தை, கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் கதாநாயகர்களாக வலம் வரும் வரிசையில் கோமாளி பட இயக்குநரும் இணைந்துள்ளார்.

புதிய படம் தொடர்பான அறிவிப்பு மற்றும், ஏனைய நடிகர்கள், நடிகைகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version