tamilni 117 scaled
சினிமாசெய்திகள்

‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் மூலம் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை! சந்தோஷ் நாராயணன் அதிருப்தி!

Share

‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் மூலம் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை! சந்தோஷ் நாராயணன் அதிருப்தி!

கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் சமூகவலை தளங்களில் பரவலாக ட்ரெண்டிங் ஆகி வைரலாக பாடல் என்றால் அது ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் தான். இதை ரீல்ஸ், டிக் டொக் என எல்லா வலைத்தளத்திலும் ரசிகர்கள் வைப் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இயக்குனர் சந்தோஷ் நாராயணன் ஒரு பதிவொன்றை விடுத்துள்ளார். ‘எஞ்சாமி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி நீங்கள் அறிந்ததே. இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் என்ன என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது நாள் வரையில் இந்தப் பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், நான் எனது சொந்த ஸ்டுடியோவைத் துவங்கவுள்ளேன். தனி இசைக் கலைஞர்களுக்கு, வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை.

இதில் கூடுதலாக எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன். தனி இசைக்கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என கூறியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...