5 14 scaled
சினிமாசெய்திகள்

ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்த தொகுப்பாளர் விஜய்! சத்தமின்றி ரிலீஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Share

ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்த தொகுப்பாளர் விஜய்! சத்தமின்றி ரிலீஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட தொகுப்பாளராக இருந்து வருபவர் தான்  மிர்ச்சி விஜய். இவர் தற்பொழுது பல ரியாலிட்ரி ஷோக்களைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இது தவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த டான் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், பிரபல தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் ஹீரோவாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அந்த படத்திற்கு “Wife” என பெயர்  வைக்கப்பட்ட நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியீட்டுள்ளனர்.

அறிமுக இயக்குனர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில், மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் நடிக்கும் “Wife” படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் தலைப்பு பற்றி இயக்குனர் ஹேமநாதன் கூறுகையில், கணவன் மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டு தான் இந்த படம் எடுக்கப்பட்டது. அதனால் தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம். ஒரு சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத சக்தி இருக்குதோ அதுபோலவே ஒவ்வொரு வீட்டிலும் மனைவிக்கு ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு உண்டு.

திருமணத்துக்கு பிறகும் மலரும் அன்பை எமோஷனலாக எடுத்து சொல்வதே என் நோக்கம். இதற்கு முன் இந்த தலைப்பு எந்த  படத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்ற விடயம் ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்தாதது எனக்கு அதிர்ஷ்டமாக இருந்துள்ளது.

மிர்ச்சி விஜய் இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கதாநாயகனாக நடிக்கிறார்.

‘டாணாக்காரன்’  படத்தில் நடித்த புகழ் பெற்ற நடிகை அஞ்சலி நாயர் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன்  மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், ,விஜயபாபு, பல்லு, கதிர்  மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...