சிறகடிக்க ஆசை புதிய ப்ரோமோ: ரோகிணியை சித்திரவைதை செய்யும் விஜயா! கேவலமாக கோலம் போடும் ரோகிணி!

riki 66275154a2581

சிறகடிக்க ஆசை புதிய ப்ரோமோ: ரோகிணியை சித்திரவைதை செய்யும் விஜயா! கேவலமாக கோலம் போடும் ரோகிணி!

பல சீரியல்களில் பல நாடகங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு சில சீரியல் தொடர்களுக்காகவே மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் சிறகடிக்க ஆசை நாடகத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக பல எபிசோட்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா காதல் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல் என் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலின் 23தொடக்கம் 27 க்கு வரையான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி

அதில் ரோகிணியின் தந்தை சிறையில் இருப்பதனால் அவரை வெளியில் கொண்டுவர நீ விரதம் இருக்கவேண்டும் என விஜயா கூறுகின்றார். பின்பு குடும்பம் முழுதையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு கோயிலில் ரோகிணிக்கு விரதம் என்ற பெயரில் விஜயா சித்திரவதை செய்கின்றார். கையில் தீபம் எந்துவது , தண்ணீர் ஊத்துவது , நிலத்தில் உருள வைப்பது என பல விடயங்களை செய்கின்றார்.மற்றும் விஜயா ரோகிணியை கோலம்போட விடும் போது மொக்கை வாங்குகிறார். இவற்றில் இருந்து ரோகிணி தப்பித்தாரா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

Exit mobile version