‘க்’ சேர்த்தது தான் கட்சியின் ஒரு மாத செயற்பாடா? கப்சிப்னு அடங்கிய விஜய்யின் அடுத்த நகர்வு என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தற்போது உச்சகட்ட அந்தஸ்தை பெற்ற முன்னணி நாயகனாக தமிழ் சினிமாவில் திகழ்கிறார்.
தமிழக வரலாற்றை பொறுத்தவரையில் சினிமா துறையில் நடிக்கும் நட்சத்திரங்களில் சிலர், அரசியலில் களமிறங்கி சிஎம் நாற்காலியை பிடிப்பது எம்ஜிஆர் காலம் முதற்கொண்டு தற்போது வரையில் தொடர்ந்து வருகின்றது.
இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த், இயக்குனர் சீமான், உலகநாயகன் கமலஹாசன் என பலரும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று ஆர்வத்தோடு அரசியலில் களம் இறங்கினார்கள்.
இளைய தளபதி விஜய் எப்போது அரசியலில் இறங்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்து அளிக்கும் வகையில், தனது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சி பெயருடன் பிரம்மாண்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் விஜய்.
தற்போது நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து ஒரு மாதங்களை கடந்துள்ளது. அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பாக பேசப்பட்ட விஜயின் கட்சி, தற்போது ஏன் அமைதியாக உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது கட்சி ஆரம்பித்த விஜய்க்கு ஆரம்பமே கட்சியின் பெயர் சர்ச்சையை கிளப்பியது. அதன் பின்பு தமிழக வெற்றிக் கழகம் என ‘க்’ கை சேர்த்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையடுத்து, கட்சி நிர்வாகிகளுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றது என்றும், அது ஆன்லைனில் தான் நடைபெறும் என்றும், அதற்காக பிரத்தியேக செயலி ஒன்று தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.
அதில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கடந்த நாட்களாகவே கட்சி பற்றி எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் இருக்க தற்போது, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கட்சிக்காக 100 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் யார் யாருக்கு என்ன என்ன பொறுப்பு என்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வெளிவரும் என கூறப்படுகிறது.
இதை வேளை, இந்த மாதம் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவதே தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் இலக்காகும் என பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.