தவெக கட்சியின் முதலாவது திட்டமே சிக்ஸர் தான்..! சொல்லி அடிப்பதில் கில்லி என நிரூபித்த விஜய்
கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் அரசியலை மையப்படுத்தியே எடுக்கப்பட்டதாக காணப்பட்டன.
அதிலும் குறிப்பாக கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்களின் வாயிலாக வெளிப்படையாகவே சில அரசியல் கட்சிக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்தார் நடிகர் விஜய்.
இதை தொடர்ந்து அண்மையில் தான் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயருடன் தனது கட்சியை பகிரங்கமாகவே அறிவித்து, கோடிக்கணக்கான ரசிகர்களின் வாக்குத் துணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அரசியல் கட்சி தொடர்பான அறிக்கையில் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் நம்முடைய இலக்கு என்பதை குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் மக்களுக்கு பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய திட்டமான விலையில்லா வீடு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இடத்தில் விஜய்யின் விலையில்லா வீடு வழங்கும் திட்டம் படி, 7 வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பிலான புகைப்படங்களும், வாழ்த்துக்களும் சமூக வலைத்தளத்தில் குவிந்து வருகின்றன.