tamilni 440 scaled
சினிமாசெய்திகள்

தளபதி வாய்ல இப்படியா சோறு ஊட்டி கிஸ் அடிப்பாங்க…!! சூர்யா ரசிங்கர்களின் வெறிச்செயல்! தீயாய் பரவும் வீடியோ

Share

தளபதி வாய்ல இப்படியா சோறு ஊட்டி கிஸ் அடிப்பாங்க…!! சூர்யா ரசிங்கர்களின் வெறிச்செயல்! தீயாய் பரவும் வீடியோ

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் ‘கோட்’ பட ஷூட்டிங்கிற்காக கடந்த ஐந்து நாட்களாக கேரளாவில் தங்கி இருந்தார். இதன்போது தனது கேரளா ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து வந்தார்.

14 ஆண்டுகளுக்கு பின் கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யை வரவேற்கும் முகமாக, விமான நிலைய வாசலிலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் வரவேற்று, விஜய்யின் கொடிகளை தாங்கி வாகன பவனியும் சென்று இருந்தார்கள்.

இவ்வாறு தனது ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய விஜய்யின் காரும் நொறுங்கிப் போனது. ஆனாலும் அதை பொருட்படுத்தமால் ரசிகர்களின் அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

அது மட்டுமின்றி குழந்தைகளுடன் போட்டோ எடுப்பது, ரசிகர்களின் அன்பு மாலையை ஓடிச் சென்று வாங்கி போடுவது என மிகவும் துருதுருவென தனது ரசிகருடனும் நேரத்தை செலவிட்டு இருந்தார்.

இறுதியாக நடிகர் விஜய் கேரளாவில் இருந்து விடைபெறும் போது, அனைத்து மலையாளிகளுக்கு நன்றி தெரிவித்து எமோஷனலாக செல்ஃபி ஒன்றையும் எடுத்திருந்தார்.

இந்த நிலையில், கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் எவ்வாறு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே போல அவருக்கு எப்படி சோறு ஊட்டி விடுவார்கள் என சூர்யாவின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த வீடியோவை திடீரென பார்க்கும்போது நடிகர் விஜய்யை போல தெரிகிறது. ஆனாலும் அவர் விஜய் இல்லை. ஆனாலும் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்று அந்த வீடியோவை அதிகமானோர் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும், கன்னட நடிகர் துனியாவின் விஜய்யின் ஹேயர் ஸ்டைல் போல தான் இப்போ விஜயின் ஹேயர் ஸ்டைல் இருக்கு என சூர்யாவின் ரசிகர்கள் குறித்த வீடியோவை வைத்து கலாய்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...