சினிமாசெய்திகள்

மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட ‘பிரேமலு’ பட நடிகர்…. ‘அமரன்’ படத்தில் இணைகிறாரா?

Share
6 13 scaled
Share

மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட ‘பிரேமலு’ பட நடிகர்…. ‘அமரன்’ படத்தில் இணைகிறாரா?

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரையும் நடித்திராத புதிய கெட்டப்பில், அதாவது கம்பீரமான ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்த திரைப்படம் தான் அமரன்.

இந்த படம் முழுக்க முழுக்க தேசப்பற்று நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், அப் படத்தை  உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், ராணுவ உயர் அதிகாரியாகவும், சிங்கம் போல் கர்ஜிக்கும் தோரணையை உடையவராகவும் மிரட்டுகிறார்.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

அண்மையில் வெளியான இந்த படத்தின் டீசர், காஷ்மீர் – இந்தியா இடையே நடக்கும் போர்க்காட்சிகள், ஒரு தலைவனாக தன்னுடைய குழுவில் உள்ளவர்களை எப்படி கையாளுகிறார், எப்படி ஊக்குவிக்கிறார் என்ற பல்வேறு விஷயங்களை அழகாக காட்டி இருந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடுவதற்கு படக்  குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த நிலையில், ‘பிரேமலு’ பட புகழ் ஷியாம் மோகன் அமரன் படத்தில் இணைந்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இவர் அமரன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...