tamilni 143 scaled
சினிமாசெய்திகள்

முகேஷ் அம்பானியின் சின்ன மருமகளான நடன அழகி..! உண்மையில் இவர் யார்? என்ன பின்னணி தெரியுமா?

Share

முகேஷ் அம்பானியின் சின்ன மருமகளான நடன அழகி..! உண்மையில் இவர் யார்? என்ன பின்னணி தெரியுமா?

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சென்டின் ப்ரி வெட்டிங் பங்க்ஷன் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இதில் உலக அளவில் காணப்பட்ட முக்கியஸ்தர்களும், நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள்

இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் மருமகளான ராதிகா மெர்சென்ட் உண்மையில் யார்? இவரின் முழு பின்னணி என்ன? என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முக்கிய மருந்து உற்பத்தி நிறுவனமான எண்கோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி விய்ரன் மெர்சன்ட்டினின் மகள் தான் ராதிகா மெர்சென்ட்.

மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். அரசியல் மற்றும் பொருளியல் துறையில் அவர் இளங்கலை பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இஷ்பிரவா என்ற கட்டுமான நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக சில காலம் பணிபுரிந்த ராதிகா, தற்போது எண்கோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திலும் பல ஆண்டுகாலம் பயிற்சி பெற்று வந்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நடன அரங்கேற்றத்தைத் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார்.

பள்ளி பருவத்திலேயே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா இருவருக்கும் இடையில் அறிமுகம் இருந்ததாக கூறப்படுகிறது.

எண்கோ மட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ராதிகாவின் பெற்றோர்கள் நடத்தி வருகின்றனர். இவற்றின் நிகர மதிப்பு 750 கோடி ரூபாய் என கூறப்படுகிறது

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...