5 15 scaled
சினிமாசெய்திகள்

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை விரட்டிய கேரளா சூப்பர் ஸ்டார்..! ஏன் தெரியுமா? சௌபின் பகிர்

Share

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை விரட்டிய கேரளா சூப்பர் ஸ்டார்..! ஏன் தெரியுமா? சௌபின் பகிர்

கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்

சிதம்பரம் என்பவர் இயற்றியுள்ள இந்த படம், கேரளாவில் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக்கொள்ள, அவரை அவரது நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் கேரளாவை போன்று தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் டப்பிங் இல்லாமல் படம் திரையிடப்பட்டாலும், பல்வேறு திரையரங்குகளில் ஏராளமான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன.

தமிழ்நாட்டில் வெளியான மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி முதல் பல பிரபல நடிகர்கள் வரை நடித்த படங்களே 10 கோடி வசூலை தாண்டாத நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 176 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணம் மம்மூட்டி தான் என மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார் மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் சௌபின் ஷாஹிர்.

மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளரும் , அப் படத்தில் நடித்த நடிகருமான சௌபின் ஷாஹிர், சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த ஒரு படத்தில் இயக்குனராக வேலை பார்த்துள்ளார். அப்போது அவர் சின்ன பையனாக இருந்தார். மம்முட்டி முன் பேப்பரும் கையுமாக போயிருக்க, உனக்கு என்ன இங்க வேலை? நீ கிளம்பு என கூறிவிட்டாராம் மம்முட்டி.

அவரது பேச்சை தட்ட முடியாமல் அங்கிருந்து கிளம்பிய சௌபியன், தனது தந்தையிடம் நடந்துவற்றை சொல்லி புலம்பியுள்ளார். இதை தொடர்ந்து மம்முட்டியை நேரடியாக சந்தித்த அவரது தந்தை, தனது மகன் கல்லூரியில் படிப்பதாகவும் அவருக்கு இயக்குனராவதில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் நீங்கள் சொன்னதை கேட்டு அவர் வருத்தப்படுகிறார் எனவும் அவருக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட மம்முட்டி சௌபினை வரச் சொல்லி, அங்கு வேலை பார்க்க சம்மதித்துள்ளார். ஆனாலும் ஒரு பக்கம் உன் வேலையை பார்த்துட்டு இன்னொரு பக்கம் படிப்ப பாக்கணும், படிப்பு ரொம்ப முக்கியம் என சொல்லி உள்ளார்.

இவ்வாறு எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைத்த மம்முட்டியின் நல்ல மனதை பற்றி தற்போது சொல்லி மகிழ்ச்சி அடைந்துள்ளார் சவுதியர் ஷாகிர் சௌபின் ஷாஹிர்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...