17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

Share

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று வருபவர் KPY பாலா. இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார் . இன்று நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை வெற்றிகரமாக முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சாய்ராம் சார்பாக சிறப்பு பாராட்டு விழா நடாத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகர் பாலா கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது .

“இந்த வெற்றியடைந்த மாணவர்கள் நம் எதிர்காலத்தின் நம்பிக்கை. அவர்களிடம் தான் நம் சமூகத்தின் மாற்றம் இருக்கிறது. அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றார்கள். இன்று அவர்களோடு இருக்க முடிந்தது என் வாழ்வில் ஒரு பெரும் மகிழ்ச்சி,” எனக் கூறினார். நிகழ்வின் முக்கியமான பகுதியாக, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே காணப்படும் போதைப்பழக்கங்கள் குறித்து பத்திரிகையர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்துள்ளார்.

அதாவது “பசங்க எல்லாரும் இப்போ நம்மளவுக்கு இல்ல, நம்ம விடவே தெளிவா இருக்காங்க. எதை எடுத்துக்கணும், எதை எடுத்துக்க கூடாது என்பதில் அவங்களுக்கு அதிக ஞானம் இருக்கு. நம்ம தான் அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கணும்” இன்றைய மாணவர்களின் அறிவாற்றலை, சமூக உணர்வை, மற்றும் அவர்களது விழிப்புணர்வை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியிருந்தார் .

இன்று திரை உலகிலும், ‘போதை பொருள் வேண்டாம்’ என்று கூறும் சிலர், உண்மையில் அதில் தாங்களே சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. இந்தக் கட்டத்தில், மாணவர்கள் தான் உண்மையான முன்னோடிகள் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் பாலா கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...