7 15 scaled
சினிமாசெய்திகள்

பாலாவுக்கு இப்படியொரு ரசிகனா? பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ஸ்பெஷல் பைக்! நெகிழ்ச்சி சம்பவம்

Share

பாலாவுக்கு இப்படியொரு ரசிகனா? பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ஸ்பெஷல் பைக்! நெகிழ்ச்சி சம்பவம்

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர்.

டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, Friendship போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள்.

இதை தொடர்ந்து, தன் சொந்த செலவில் மக்களுக்காக 5வது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்து உதவினார், மாற்றுத்திறனாளிக்கு பைக் வாங்கிக் கொடுத்தார்.

மேலும், பெற்றோல் பங்கில் பைக் வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட இளைஞரின் ஆசையை நிறைவேற்றி, அவருக்கு பைக் ஒன்றை பரிசாக கொடுத்து இருந்தார் நடிகர் பாலா.

இந்த நிலையில், தூக்கி எறியப்படும் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம், பெட்ரோல் பங்க் ஆகியவற்றை செய்த பள்ளி மாணவன் ஒருவர், அதனை நடிகர் பாலாவிற்கு அன்பளிப்பு கொடுக்க எதிர்பார்த்து உள்ளார்.

அண்மையில் பெற்றோல் பங்கில் வேலை செய்யும் இளைஞனுக்கு பாலா பைக் வாங்கி கொடுத்ததற்கு சின்ன அன்பளிப்பு செய்யும் முகமாக பாண்டிச்சேரியில் உள்ள குறித்த மாணவன், நான் சென்னைக்கு வந்தது இல்லை பாண்டிச்சேரி வந்தா கட்டாயம் எனது பரிசை வாங்குமாறு அன்பாக கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது குறித்த காணொளி வைரலாகி உள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...