சினிமாசெய்திகள்

வந்த முதல்நாளே அர்ச்சனாவை அசிங்கப்படுத்தி அழவைத்த மாயா!

11 1 scaled
Share

வந்த முதல்நாளே அர்ச்சனாவை அசிங்கப்படுத்தி அழவைத்த மாயா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு வைல்டு கார்டு என்ட்ரியான ஐந்து பேரையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் வந்ததும் தமது வன்மத்தை காட்டத் தொடங்கியுள்ளனர் சக போட்டியாளர்கள். அதிலும் மாயா, பூர்ணிமா செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

இவ்வாறான நிலையில், ‘பிக்பாஸ் வீட்டுக்குள்ள அர்ச்சனா வரும்பொழுது நாம யாரும் சரியா வெல்கம் பண்ணல’ என்று பூர்ணிமா சொல்ல, ‘அத எதிர்பார்க்காதீங்க’ என்று மாயா உடனே பதில் சொல்கிறார்.

இதை பார்த்த அர்ச்சனா ‘எதிரியாக இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வராங்கனா ஒரு 5 நிமிஷம் சிரிச்சு பேசிட்டு அதுக்கப்புறம் தான் சண்டைய பாக்கணும்’ என்று சொல்ல மாயா உட்பட அனைவரும் சிரிக்கின்றனர்.

அதற்கு, ‘உங்களோட கலாய்களுக்கு நாங்க எப்படி அமைதியா போகனு நினைக்கிறீங்க’ என்று அர்ச்சனா சொல்ல ‘உங்கள்ட டிஸ்ரெஸ்பெக்ட் புல்லா பேசியிருந்தால் சாரி’ என மாயா கிண்டலாக சொல்கிறார். இதையடுத்து மாயா அழ ஆரம்பிக்கிறார்.இது தான் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோ. பொறுத்திருந்து அர்ச்சனாவின் ஆட்டத்தை பார்ப்போம்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...