re 66bf534325381
சினிமா

தாறுமாறாக வெளியான கோட் படத்தின் போஸ்டர்.. லாஸ்ட் டேட், டைம் இதுதானாம்..?

Share

தாறுமாறாக வெளியான கோட் படத்தின் போஸ்டர்.. லாஸ்ட் டேட், டைம் இதுதானாம்..?

தமிழ் சினிமாவில் மங்காத்தா, மாநாடு போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, ஸ்நேகா, மைக் மோகன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பதால் இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அத்துடன் அண்மையில் உயிரிழந்த விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜி ஊடாக சில காட்சிகளை நடிக்க வைத்துள்ளனர்.

கோட் திரைப்படத்திலிருந்து இதுவரையில் மூன்று பாடல்கள் வெளியானது. அதில் விஜய் – சினேகா காம்போவில் வெளியான மெலோடி பாடல் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏனைய இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறப்படுகிறது. அதிலும் இறுதியாக வெளியான ஸ்பார்க் பாடல் படு விமர்சனத்திற்கு உள்ளானது.

இதைத் தொடர்ந்து கோட் படத்தின் ட்ரெய்லர் சுகந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும் எனவும் தாம் அதை பெரிய லெவலில் செய்வதாகவும் இந்த படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது கோட் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இதன் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...