tamilni 168 scaled
சினிமாசெய்திகள்

சினிமா உனக்கு செட் ஆகாது.. பேசாமல் குழந்தை பெற்றுக்கொள்.. ஹன்சிகாவுக்கு குடும்பத்தார் போட்ட நிபந்தனை?

Share

சினிமா உனக்கு செட் ஆகாது.. பேசாமல் குழந்தை பெற்றுக்கொள்.. ஹன்சிகாவுக்கு குடும்பத்தார் போட்ட நிபந்தனை?

நடிகை ஹன்சிகா நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதை அடுத்து சினிமா இனி உனக்கு செட் ஆகாது, குழந்தை பெற்றுக்கொள் என்று அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஹன்சிகா கடந்த 2011 ஆம் ஆண்டு ’எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அதன் பின்னர் தனுஷுடன் ’மாப்பிள்ளை’ விஜய்யுடன் ’வேலாயுதம்’ சூர்யாவுடன்’ சிங்கம் 2’ என வரிசையாக வெற்றி படங்களில் நடித்தார்

இந்த நிலையில் ’பிரியாணி’ ’மான் கராத்தே’ ’அரண்மனை’ ’வாலு’ ’அரண்மனை 2’ ’மனிதன்’ என தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு திடீரென ஒரு சறுக்கல் ஏற்பட்டது. அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து கொண்டிருந்த நிலையில் அவர் தனது 50 வது படமான ’மகா’ படத்தை மலைபோல் நம்பினார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த படமும் தோல்வியடைந்த நிலையில் அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹேல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இனி சினிமாவில் நடித்தது போதும், குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடு’ என்று அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாகவும், தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு அனேகமாக ஹன்சிகா திரையுலகில் இருந்து விலகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...