எப்போதும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விக்ரமின் (சியான்) அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
விக்ரம் நடிப்பில் இந்த வருடம் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், அடுத்து அவர் நடிக்கவிருக்கும் ‘சியான் 63’ திரைப்படத்தை போடி ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் (Shanthi Talkies) நிறுவனம், இதனைப் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.