சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் செப்டெம்பர் 15 தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் திடீரென தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.
ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணத்தை தற்போது இயக்குனர் பி.வாசு தெரிவித்து இருக்கிறார். படத்தினை இறுதியாக பார்க்கலாம் என இருந்த நேரத்தில் 480 ஷாட்களை காணவில்லை என படக்குழு தெரிவித்ததால் தான் ஷாக் ஆனதாக அவர் கூறி இருக்கிறார்.
அதன் பின் பல நாட்கள் போராடி தான் அந்த காட்சிகளை திரும்ப பெற்றதாக அவர் கூறி இருக்கிறார்.