tamilni 494 scaled
சினிமாசெய்திகள்

”கேப்டன் விஜயகாந்த் தெரு” கிராம மக்களின் நெகிழ்ச்சி செயல்

Share

”கேப்டன் விஜயகாந்த் தெரு” கிராம மக்களின் நெகிழ்ச்சி செயல்

மறைந்த நடிகர் விஜயகாந்தின் பெயரை தங்கள் கிராமத்தின் தெருவுக்குப் பெயராகச் அந்த கிராம மக்கள் சூட்டியுள்ளனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வரமுடியாத பல பிரபலங்களும் தேமுதிக அலுவலத்தில் அவரது நினைவிடத்திற்கு வந்து, நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜயாகாந்த் மறைவை ஒட்டி அவரது பெயரைச் சாலைக்குச் சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், கீழ் மனம்பேடு பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு ”கேப்டன் விஜயகாந்த் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்துள்ளனர். கிராம மக்களின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...