நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகர் தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு, அரசு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி நடிகர் தினேஷ் ரூ. 3 லட்சம் பெற்றதாகவும், ஆனால் அரசு வேலை வாங்கித் தரவில்லை எனவும் முறைப்பாடளித்தவர் தெரிவித்துள்ளார்.
பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன், தன்னைத் தாக்கியதாகவும் கருணாநிதி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடிகர் தினேஷை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

