சினிமாசெய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பிக்பாஸ் வீட்டின் நிலை என்ன?

r1
Share

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பிக்பாஸ் வீட்டின் நிலை என்ன?

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பிக் பாஸ் வீடு சிக்கியுள்ளதா, உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 நடந்து கொண்டிருக்கிறது.

இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.

இதில் பலர் வெளியேறி, புதிதாக இரண்டு பேர் உள்ளே இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளம் வந்து பிக் பாஸ் வீடு மூழ்கியுள்ளதா என ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் வீடு வெள்ளத்தில் மூழ்கியதா?
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பிக் பாஸ் வீடு சிக்கியுள்ளதா, உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் நிலை என்ன என்பது குறித்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. ஆகவே வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நட்சத்திர விடுதி ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பிக்பாஸ் வீட்டின் நிலை என்ன? | Bigg Boss Contestants Situation Michaung Cyclone

அதுபோலவே இந்த ஆண்டும் சென்னையானது வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியுள்ளது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு எந்தவொரு பாதிப்பு எற்படவில்லை என பிக் பாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

அதாவது, வேலை முடிந்து வீட்டுக்கு பார்த்து பாதுகாப்பாக போங்க. ஆங்காங்கே மரங்கள் விழுந்திருக்கும், வயர் கட்டாகி கிடக்கும், மழையில் ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க. எங்களுக்காக உழைக்குறவங்களும் பாதுகாப்பா இருக்கணும். நாங்க இங்கு பாதுகாப்பாக இருந்தாலும் எங்க நினைப்பு எல்லாமே வெளியில் தான் உள்ளது.

எல்லோருமே சென்னை வெள்ளத்தைப் பார்த்திருக்கிறோம். எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்குங்க. கண்டிப்பாக உங்களுக்காக நாங்க எல்லாருமே வேண்டிக்கொள்கிறோம்” என தினேஷ் கூறியுள்ளார்.

மேலும் பொது மக்களுக்காக அனைத்து போட்டியாளர்களும் பிராத்தனை செய்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....